கடந்த மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன், 1 லட்சத்து 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருடன் சுயேச்சையாகப் போட்டியிட்ட பிரவீணா, சேலம் எம்.பி பார்த்திபன் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
சேலம் தொகுதி எம்.பி.யின் வேட்புமனு குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு - parthipan
சென்னை: சேலம் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி. பார்த்திபனின் வெற்றியை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவிற்குப் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதில், ”வேட்புமனுவுடன் தாக்கல் செய்த படிவம் 26ல் வேட்பாளர்கள், குற்ற விபரங்கள், சொத்து உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிக்க வேண்டும். இந்த விபரங்களை முறையாகச் சமர்ப்பிக்காத பார்த்திபனின் வேட்பு மனுவைத் தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது சட்டவிரோதமானது. பார்த்திபன் வெற்றியை செல்லாது என அறிவித்து மீண்டும் சேலம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.”, எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, மனுவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் சேலம் எம்.பி பார்த்திபன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 20 ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.