திருவொற்றியூர் ராஜா கடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதே பகுதியில் ஃபேன்சி ஸ்டோர் நடத்திவருகிறார். இவரது மனைவி மீனாவுடன் அருகில் உள்ள உறவினர்கள் வீட்டு கிரக பிரவேசத்திற்குச் சென்றுவிட்டு, தனது தந்தை நினைவு நாள் நிகழ்ச்சிக்குச் செல்வதற்காகக் கணவருடன் இருசக்கர வாகனத்தில் கேவிகே குப்பம் அருகே சென்றிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி பின்னால் வந்த இருவர் மீனாவின் கழுத்தில் இருந்த 21 பவுன் தங்க நகையைப் பறிக்க முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட மீனா கொள்ளையனை கையோடு சேர்த்து நகைகளைப் பிடித்துக் கொண்டார். இதனால், கொள்ளையர்கள் கணவன் மனைவி இருவரையும் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே தள்ளி விட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர். இதில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தார்.