சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர், சம்பங்கி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மனைவி லட்சுமி(51). இந்நிலையில், லட்சுமி கடைக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிகொண்டிருந்தார்.
முகவரி கேட்பதுபோல் பெண்ணிடம் நகை பறிப்பு! - சென்னை ஆவடி
சென்னை: ஆவடி அருகே திருநின்றவூரில் முகவரி கேட்பதுபோல் பெண்ணை திசை திருப்பி ஒன்பது சவரன் தங்கநகையை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், லட்சுமியை வழிமறித்து வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அவர்களில் ஒருவர் முகவரி விசாரிப்பது போல் நடித்து உள்ளார்.
திடீரென்று அந்த அடையாளம் தெரியாத நபர் லட்சுமியின் கழுத்தில் இருந்த ஒன்பது சவரன் தாலி செயினை பறித்துக கொண்டு தயாராக நின்ற இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றான். புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களை கண்காணிப்பு கேமரா மூலமாக தேடி வருகின்றனர்.