சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கோமதி. இவருக்கு வயது 54. இவர் நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த மர்ம நபர்கள், கோமதி கழுத்தில் இருந்த ஒரு சவரண் தங்க தாலியை பறிந்துக் கொண்டு, அவரைத் தாக்கி விட்டு வாகனத்தில் பறந்து சென்றனர்.
சாலையில் நடந்து செல்லும் பெண்களைக் குறிவைக்கும் கொள்ளையர்கள்! - நகை கொள்ளை
சென்னை: அரும்பாக்கத்தில் நேற்று இரவு மளிகை கடைக்குச் சென்ற பெண்ணின் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் நடந்து செல்லும் பெண்களை குறிவைக்கும் கொள்ளையர்கள்!
திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே ஓடிய கோமதி, நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். இதையடுத்து, அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.