தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் சென்ற பெண்ணிடம் 4 சவரன் செயின் பறிப்பு! - செயின் பறிப்பு

சென்னை: பல்லாவரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நான்கு சவரன் செயினை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சாலையில் சென்ற பெண்ணிடம் 4 சவரன் செயின் பறிப்பு
சாலையில் சென்ற பெண்ணிடம் 4 சவரன் செயின் பறிப்பு

By

Published : Feb 19, 2021, 7:26 PM IST

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் ராணி (52). உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்று (பிப்.19) காலை பல்லாவரம் கன்டோன்மென்ட் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

பின்னர், அவர் பாரதி நகர் கிருஷ்ணன் தெரு வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ராணி கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவரன் தங்கச் செயினை பறித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராணிக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பல்லாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுக கறி விருந்து: மூதாட்டி காதை அறுத்து நகை திருட்டு

ABOUT THE AUTHOR

...view details