கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல், 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் 159 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
தொடர்ந்து, வரும் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் எனக் கூறப்படுகிறது.