தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் தீவிர ஆலோசனைக் கூட்டம் - tamilnadu election higher ooficer

சென்னை: தேர்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

By

Published : Apr 13, 2019, 6:43 PM IST

தமிழ்நாட்டில் வருகின்ற 18 ம் தேதி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ, தேர்தல் கால டி.ஜி.பி அசுதோஸ் சுக்லா, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்..

இதில், தேர்தல் தொடர்பாக முறைகேடுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அரசில் கட்சியினரால் கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக விளக்கங்கள் விவாதிக்கப்பட்டது. மேலும், 1950 எண் மூலம் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட புகார்கள், தேர்தல் வாக்குப்பதிவின் போது செய்யப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details