சென்னை:மாநில அரசு மத்திய அரசுக்கும், மத்திய அரசு மாநில அரசுக்கும் வழங்கவேண்டிய நிலுவை தொகை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக உறுப்பினர் வானதி சீனவாசன் தெரிவித்தார்.
மின்சார துறை மானியக்கோரிக்கை விவாத்தில் பேசிய வானதி சீனிவாசன், “கோயமுத்தூர் நகரை சுற்றி் குளங்கள் அதிகமாக இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த குளங்களை சீரமைக்க வேண்டும்.மேலும், தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு மாற்றப்பட்டாலும், இத் திட்டத்தில் 23 சதவீதம் பயனாளர்கள் சரியாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தங்கம் கொடுக்க வேண்டும்.
பேரவையில் பல முறை மத்திய அரசு கொடுக்கவேண்டிய நிலுவை தொகை வாங்கி தர வேண்டும் என்கிறார்கள். அதனால், மாநில அரசுக்கு எந்தெந்த துறையில் எவ்வளவு நிலுவை தொகை மத்திய அரசு வழங்கவேண்டியது குறித்த தகவல்களை தரவேண்டும். அதோடு மாநில அரசு மத்திய அரசுக்கும், மத்திய அரசு மாநில அரசுக்கும் வழங்கவேண்டிய நிலுவை தொகை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்".
மேலும் தமிழக அரசு மதுவிலக்கு கொண்டு வரவேண்டுமென்று வலியுறுத்திய வானதி சீனிவசான், பல ஆலோசனைகளை அரசுக்கு முன் வைத்த நிலையில் மது தொடர்பாக பேசிய அனைத்தும் அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நாகூர், வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு அடிப்படை வசதிகள் தேவை: விசிக