தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய நாளை சென்னை வரும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வருகை

Chennai Flood: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பர் 7ஆம் தேதி சென்னை வருகிறார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 10:37 PM IST

சென்னை : மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பர் 7ஆம் தேதி சென்னை வருகிறார்.

வங்கக் கடல் பகுதியில் நிலவிய மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து உள்ளன.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பர் 7ஆம் தேதி சென்னை வருகிறார். அவருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை வரும் ராஜ்நாத் சிங் மழை வெள்ளம் மற்றும் புயலால் ஏற்பட்ட சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

இந்த ஆய்வின் போது தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உடன் இருப்பார் என தெரிவிக்கப்பபட்டுள்ளது. பின்னர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், எல்.முருகனும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வெள்ளச் சேதங்கள் குறித்து கேட்டறிய உள்ளனர்.

முன்னதாக, தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை சீரமைக்க இடைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :சென்னையில் வெள்ளப் பாதிப்புகள் எப்போது முடிவடையும்? விரைவில் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின் சிறப்பு முகாம்கள் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

ABOUT THE AUTHOR

...view details