தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதயநிதி சனாதன விவகாரம்.. நாக்கை அறுத்து, கண்களை பிடுங்கி எறிவோம்... சர்ச்சையை கிளப்பும் மத்திய அமைச்சரின் வீடியோ! - Udhayanidhi Stalin against the Sanatan Dharma

சனாதனம் குறித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சனாதனம் குறித்து அவதூறு கருத்து வெளியிடுபவர்களின் நாக்கை அறுத்து, கண்களை பிடுங்குவதாக பிரசார கூட்டத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

udhaynidhi Stalin
udhaynidhi Stalin

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 11:43 AM IST

ஜெய்ப்பூர் : சனாதானம் குறித்து அவதூறு கருத்து வெளியிடுபவரின் நாக்கை அறுத்தும், கண்களை பிடிங்கி எறிவோம் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்து உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அடுத்த பார்மர் பகுதியில் கடந்த வாரம் நடந்த பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மலேரியா, டெங்குவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்து பெறும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத், சனாதன விவகாரத்தில் நேரடியாக சவால் விடுவதாகவும், சனாதனம் குறித்து அவதூறு கருத்து வெளியிடுபவர்களின் நாக்கை அறுத்து, கண்களை பிடுங்கி எறியப்படும் என்றும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details