சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் மாடர்ன் சிட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், அரசுப் போக்குவரத்துத் துறையில் ஓட்டுநராக பணியாற்றிவருகிறார். இவர், கடந்த ஐந்தாம் தேதி தனது குடும்பத்துடன் சிவகங்கைக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார்.
இதை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகை, மூன்று லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
போக்குவரத்து துறை ஊழியரின் வீட்டில் 15 சவரண் தங்க நகை கொள்ளை இதையடுத்து, இன்று காலை தனது வீட்டிற்கு வந்த செல்வகுமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் இது குறித்து பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.