தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர்! - மத்திய அமைச்சர்

சென்னை: மீன்பிடி துறைமுகத்தை, மத்திய மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (ஜன.23) பார்வையிட்டார்.

துறைமுகத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர்
துறைமுகத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர்

By

Published : Jan 23, 2021, 9:19 AM IST

சென்னை மீன்பிடி துறைமுகத்தை, மத்திய மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (ஜன.23) நேரில் பார்வையிட்டார். பின்னர், மீனவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள், வசதிகள், சமூக நலத்திட்டங்கள், காப்பீடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமும் மத்திய அரசிடம் உள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். மேலும், மீனவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை அவர் பெற்று இது குறித்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் அவருடன் மத்திய மீன்வளத்துறை செயலர் ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு அரசின் செயலர் கோபால், சென்னை துறைமுக கழக துணைத் தலைவர் பாலாஜி அருண் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் 15 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் - அமைச்சர் பாண்டியராஜன்

ABOUT THE AUTHOR

...view details