இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டுக்கு பிறகு 2021ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு விரைவில் நடக்கவுள்ளது.
மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவு - tamilnadu government
சென்னை: 2021ஆம் ஆண்டுக்கான மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.
மக்கள் தொகை
இதற்கான மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தனது அரசிதழில் வெளியிட்டுள்ளது.