கடந்த மாதம் மெட்ரோ ரயில் ஊழியர்கள் எட்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் நிர்வாகத்தைக் கண்டித்து மெட்ரோ ரயில்
ஊழியர்கள் கோயம்பேடு மெட்ரோ தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை மெட்ரோ ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. மூன்று நாட்கள் நீடித்த இந்த போராட்டம், பேச்சுவார்த்தைக்குப் பின் சுமூக முடிவு எட்டப்பட்டு மீண்டும் சேவை தொடங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் - பயணிகள் கடும் அவதி!
சென்னை: மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இன்று காலையிலிருந்தே சென்னை மெட்ரோ ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. சென்னை நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால் ரயில் சேவை நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்பட்டதாகவும், அதேபோல் பல ரயில் நிலையங்களில் லிஃப்ட், எஸ்கலேட்டர்களும் சரிவர இயங்கவில்லை என்றும், ஷெனாய் நகர் - சென்னை சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் சேவையும், சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்திற்கு நேரடி ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிரந்தர ஊழியர்களை தவிர்த்து இயக்க கட்டுபாட்டு அறையில் மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளதாகவும், ஒப்பந்த ஊழியர்களை வைத்து பராமரித்தால் சிக்னல் சேவையில் பழுது அடிக்கடி ஏற்படுகிறது எனவும் கூறப்படுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னை மெட்ரோ சேவையில் ஏற்பட்டுள்ள தொய்வு பயணிகளை கடுமையான அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும், கோளாறுகள் கண்டறியபட்டு மெட்ரோ சேவை எந்த பாதிப்பும் இல்லாமல் இயங்கி வருகிறது எனவும் மெட்ரோ நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.