சென்னை நுங்கம்பாக்கத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வருபவர் பிரசன்னா லிப்ஷா(34). இவர் கடந்த 12ஆம் தேதி காலை தனது தோழியுடன் அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு பார்லருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பிரசன்னா லிப்ஷா கையில் இருந்த செல்ஃபோனை பறித்துச் சென்றனர்.
இருசக்கர வாகனத்தில் வரும் காதல்ஜோடி இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், செல்ஃபோன் பறிப்பு நடந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
திருடப்பட்ட இருசக்கர வாகனம் இந்நிலையில், கொள்ளையர்கள் இருவரும் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள் லாட்ஜில் தங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சூளைமேட்டைச் சேர்ந்த ராஜூ(29), கல்லூரி மாணவி சுவாதி (20) ஆகிய இருவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும், காதலர்களான இருவரும் வேளச்சேரி பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடி தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சி