சென்னை புனித ஜார்ஜ் கோட்டை காவல் துறையினர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராயபுரித்தில் இருந்து சென்னை கடற்கறை நோக்கி தனது மிதிவண்டியில் சென்ற தனிஷ் என்ற இளைஞரிடம், நேப்பியர் பாலம் அருகே நின்றிருந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி செல்ஃபோனை பறித்துள்ளனர்.
செல்ஃபோன் திருடிய இரண்டு பேர் கைது! - Napier Bridge
சென்னை: நேப்பியர் பாலம் அருகே பட்டன் கத்தியுடன் செல்ஃபோன் திருடிய இரண்டு நபர்களை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதைப்பார்த்த, காவலர்கள் அவர்களை விரட்டிப் பிடித்து, அவர்களிடமிருந்த பட்டன் கத்தியைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், போரூரைச் சேர்ந்த ஆகாஷ், சைதாப்பேட்டையைச் சேர்ந்த கோபிநாத் ஆகிய இருவரும் மதுபோதையில் மொபைல் பறிப்பதற்காக இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் இவர்கள் இருவருக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.