தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் கைது! - செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது

சென்னை: வடபழனி-ஆற்காடு சாலையில் நடந்து சென்றவரிடம் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் காவல் துறையினர் கைது செய்தனர்.

cell-phone-snatch-in-chennai-cctv-footage

By

Published : Sep 25, 2019, 11:31 PM IST

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (23). இவர் இன்று அதிகாலை தனது அலுவலகத்தில் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு ஆற்காடு சாலை வழியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் முத்துக்குமாரின் செல்ஃபோனை பறித்துவிட்டு தப்பி சென்றனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து முத்துக்குமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிசிடிவியில் பதிவான காட்சி

புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொள்ளையன் பயன்படுத்திய இருசக்கர வாகனப்பதிவு எண்ணை கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட மதுரவாயலை சேர்ந்த விக்னேஷ்(18), ஆனந்த்(19) என்ற இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள்

மேலும் ,இவர்கள் இதேபோன்று வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கமிஷனர் அலுவலகம் முன்பே கைவரிசை -அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details