தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயிலர் எப்படி இருக்கு.. பிரபலங்களின் ரியாக்‌ஷன் என்ன? - chennai cinema news

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை பார்த்தப் பிரபலங்களான ராகவா லாரன்ஸ், வசந்த் ரவி, வெங்கட் பிரபு, அனிருத்,”தலைவர் நிரந்தரம்” என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Etv Bharatஜெயிலர் எப்படி இருக்கு.. பிரபலங்களின் ரியாக்‌ஷன் என்ன?
Etv Bharaஜெயிலர் எப்படி இருக்கு.. பிரபலங்களின் ரியாக்‌ஷன் என்ன?t

By

Published : Aug 10, 2023, 5:49 PM IST

சென்னை:சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 10) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படத்தில் தென்னிந்திய பிரபலங்களான தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் ரஜினிக்கு இதற்கு முன் வெளியான படங்களில் இருந்து இப்படம் நிச்சயம் வேறுபட்டு இருப்பதாகவும், நெல்சன் சம்பவம் செய்துள்ளார் என்றும், இருவருக்கும் இப்படம் கம்பேக் படமாக இருக்கும் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் 'தலைவர் நிரந்தரம்' என்று பதிவிட்டுள்ளார். இப்படத்தில் ரஜினியின் மகனாக நடித்த வசந்த் ரவி, ஜெயிலர் எனது திரை வாழ்வில் மிக முக்கியமான மைல்ஸ்டோன் என்றும்; என்மேல் நம்பிக்கை வைத்த நெல்சன் மற்றும் ரஜினிகாந்துக்கு நன்றி எனவும், இன்று முதல் உங்களை அப்பா என்று அழைக்கிறேன் என்ற நெகிழ்ச்சிப் பதிவை செய்துள்ளார்.

இதையும் படிங்க:ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு செய்த ரஜினி ரசிகர்கள்!

மேலும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஜெயிலர் பிளாக் பஸ்டர் என்றும்; பாட்ஷா படத்துக்குப் பிறகு, திரையரங்கில் இப்படத்தை பார்த்து உடல் சிலிர்த்தது எனவும், தலைவர் வெறித்தனம், தலைவர் நிரந்தரம் என்றும் பதிவிட்டுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியசாமி, ரத்னகுமார் உள்ளிட்டோரும் ஜெயிலர் படம் பார்த்து சமூக வலைதளங்களில் ஃபயர் விட்டு வருகின்றனர்.

சென்னை ரோகினி திரையரங்கில் ரஜினியின் குடும்பத்தினர் முதல் நாள் காட்சி பார்த்து மிகப்பெரிய கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திரையுலகமே திரண்டு கொண்டாடும் படமாக, 'ஜெயிலர்' இன்று வெளியாகியுள்ளதால் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் நிறைய சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் ஜெயிலர் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:Jailer Movie Release: வெளியானது ஜெயிலர்.. திருவிழாவாக கொண்டாடிய திருச்சி ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details