சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர் கீழ்கட்டளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்.
இவர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று (ஆக .03) இரவு தனது வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் காலை வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.