தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதை கும்பல் உணவகத்திற்குள் புகுந்து அட்டூழியம்..

சென்னை பெரியமேட்டில் உணவகத்திற்குள் புகுந்த போதை ஆசாமிகள் இளைஞரை தாக்கிவிட்டு கடையை அடித்து நொருக்கிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Etv Bharat சிசிடிவி காட்சி
Etv Bharat சிசிடிவி காட்சி

By

Published : Sep 1, 2022, 5:29 PM IST

சென்னை: பெரியமேடு எம்.வி பத்ரன் தெருவில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு நேற்றிரவு (ஆக.31) அன்சர் என்ற இளைஞர் ஒருவர் சாப்பிட வந்தார். அப்போது, திடீரென அந்த உணவகத்திற்குள் புகுந்த கஞ்சா போதை கும்பல் ஒன்று அந்த இளைஞரை தாக்கினர்.

பின்னர் உணவகத்திற்குள் இருந்த பொருள்களை அந்த போதை கும்பல் அடித்து உடைத்து தூக்கி எறிந்து அராஜகத்தில் ஈடுபட்டது. இது தொடர்பாக காயம்பட்ட அன்சர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

சிசிடிவி காட்சி

தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, அந்த போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர். இந்த போதை ஆசாமி கும்பல் தொடர்ந்து இதே பகுதியில் உள்ள உணவகத்திற்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் ரூ.1.85 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details