சென்னை மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவில் வசித்துவருபவர் சரவணன். இவர் தனது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் இன்று (ஆகஸ்ட் 2) திருடப்பட்டுள்ளது. இதையடுத்து, சரவணன் வீட்டருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
கள்ளச்சாவி போட்டு பைக் திருடிய மூவருக்கு போலீஸ் வலைவீச்சு - வெளியான சிசிடிவி காட்சி! - cctv footage of bike theft
சென்னை: வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அதில், அதிகாலை 2.30 மணியளவில் மூன்று பேர் கொண்ட கும்பல் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை ஒன்றன்பின் ஒன்றாக கள்ளச்சாவி போட்டு திறக்க முயற்சித்துள்ளனர். பின்னர் சரவணனின் இருசக்கர வாகனத்தை ஆன் செய்ததும், அவர்கள் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர். இந்தக் காட்சி அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின்பேரில் மயிலாப்பூர் காவல் துறையினர் சிசிடிவி காட்சி அடிப்படையில் மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிசிடிவி: பட்டப்பகலில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் திருட்டு!