தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தேல் பத்ரி சிங்'... இருசக்கர வாகனத்தைத்திருட முயன்ற போதை ஆசாமியின் வீடியோ - திருட முயன்ற போதை ஆசாமியின் வீடியோ

அம்பத்தூரில் இருசக்கர வாகனத்தைத் திருட முயன்று தோல்வி அடைந்த போதை ஆசாமியின் நகைச்சுவையான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

தேல் பத்ரி சிங்
தேல் பத்ரி சிங்

By

Published : Oct 28, 2022, 6:19 PM IST

சென்னை அடுத்த அம்பத்தூர் கருக்குப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில், அதிகாலையில் போதை ஆசாமி ஒருவர் இருசக்கர வாகனத்தைத்திருட முயன்றுள்ளார். இதனையடுத்து தான் வைத்திருந்த போலி சாவியைக்கொண்டு, இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து திருடிச்செல்ல முயற்சித்தார். ஆனால், வண்டி நகர வில்லை.

எனவே, கீழே சாய்ந்த வண்டியில் இருந்து இறங்கிய அவர், மீண்டும் தள்ளாடிக்கொண்டே பழைய படி வண்டியை தூக்கி நிறுத்தி மறுபடியும் ஸ்டார்ட் செய்ய முயற்சித்தார். ஆனால், வண்டி மீண்டும் கீழே சாய்ந்தது. இதனால் கிறுகிறுத்துப்போன போதை ஆசாமி விட்டால்போதும் என அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

இருசக்கர வாகனத்தை திருட முயன்ற போதை ஆசாமியின் வைரல் வீடியோ

இதில் நகைச்சுவை என்னவென்றால் இருசக்கர வாகனத்தின், பின் சக்கரத்தில் சங்கிலி கட்டியிருந்ததை கடைசி வரை திருட வந்த போதை ஆசாமி கவனிக்கவில்லை. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க:சிசிடிவி: நள்ளிரவில் பெட்ரோல் திருடும் கும்பல்

ABOUT THE AUTHOR

...view details