பரங்கிமலை காவல் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நந்தம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார்.
முப்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிண்டி கத்திபாரா முதல் போரூர் வரையில் 121 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும். இதில் 8 கேமராக்கள் வாகனங்களின் எண்களை துல்லியமாக பதிவு செய்யுமெனவும் தெரிவித்தார்.
தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அதிகம் அமைந்துள்ள கிண்டி முதல் போரூர் வரையிலான சாலையில் போக்குவரத்தை சரி செய்யவும், குற்ற சம்பவங்களை குறைக்கவும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மெரினாவில் பலூன் விற்கும் ஏழை தம்பதியின் காணாமல் போன 7 மாத குழந்தையை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைத்த போது கிடைத்த மன நிறைவுக்கு ஈடுஇணை எதுவும் இல்லை. இதற்கு முதன்மையாக உதவியது சி.சி.டி.வி. கேமராக்கள் தான் என பெருமிதம் கொண்டார்.