தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்னேஷ் மரண வழக்கு - 6 போலீசாருக்கு எதிராக சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்! - ஆறு போலீசாருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில், ஆறு போலீசாருக்கு எதிராக, சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Cbcid
Cbcid

By

Published : Nov 28, 2022, 5:29 PM IST

சென்னை: சென்னை தலைமை செயலக குடியிருப்பு போலீசார் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்ததாக ஓட்டுநர் விக்னேஷ் என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். மறுநாள் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தலைமை செயலக காலனி காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் முனாப், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், ஆயுதப்படை காவலர்கள் ஜெகஜீவன்ராம், சந்திரகுமார் ஆகியோருக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டத்தின் கொலை குற்றச்சாட்டு மற்றும் வன்கொடுமை தடைச் சட்டப்பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு, சிபிசிஐடி போலீசார் சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி குற்றப்பத்திகையை தாக்கல் செய்தார்.

அதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், 6 காவலர்களுக்கு எதிராக 127 சாட்சிகளின் வாக்கு மூலங்கள், 290 ஆவணங்களுடன், 64 சான்று பொருட்கள் குறித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க:விக்னேஷ் லாக்கப் மரணம்.. ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

ABOUT THE AUTHOR

...view details