தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'முகிலனை பற்றி தகவல் கொடுத்தால் வெகுமதி' - சிபிசிஐடி அறிவிப்பு! - egmore railway station

சென்னை: "காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும்" என்று சிபிசிஐடி அறிவித்துள்ளது.

CBCID

By

Published : Mar 14, 2019, 5:16 PM IST


சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சமூக செயற்பாட்டாளரும், பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி ஆவணப்படத்தை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அன்று இரவே முகிலன் எழும்பூர் ரயில் நிலையத்தில் மாயமானார்.

இந்நிலையில் முகிலனை உடனே கண்டுபிடிக்க கோரி பல்வேறு தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சமூகப் போராளி முகிலன் காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி சார்பில், முகிலனை காணவில்லை என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் முகிலன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் எனவும் சிபிசிஐடி அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details