சென்னை கொடுங்கையூர் சேலைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு சொந்தமான டாடா ஏசி வண்டியை வீட்டிற்கு அருகே நிறுத்திவைப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி அவரது வாகனத்தில் இருந்த பேட்டரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயகுமார் வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தார்.
பேட்டரி திருடன் - காட்டி கொடுத்த சிசிடிவி - battery theft
சென்னை: கொடுங்கையூரில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தில் இருந்து பேட்டரியை திருடி சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவரை சிசிடிவி பதிவுகளை வைத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பேட்டரி திருடன்
அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விஜயகுமார் வீட்டின் அருகே சிறுநீர் கழிப்பது போல சென்று வாகனத்தில் இருந்த பேட்டரியை எடுத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து, விஜயகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் யார் என்பது குறித்து கொடுங்கையூர் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.