சென்னை:நேரடியாக சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த 11ஆம் வகுப்பு சேர்க்கைப் படிவத்தை நிறுத்தி வைக்குமாறு, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றின் இரண்டாவது அலை குறைந்து வருவதையொட்டி, சென்னையிலுள்ள பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு சேர்வதற்கான படிவத்தை விநியோகம் செய்யலாம் என, தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதையடுத்து சென்னையிலுள்ள 32 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளிலும், பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்கான படிவத்தை இன்று (ஜூன்.14) காலை முதல் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் வழங்கிவந்தனர்.
இந்தநிலையில், அந்தப் படிவத்தில் சாதி அடிப்படையான கேள்வியில் தாழ்த்தப்பட்டோர், மலை சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என குறிப்பிட்டிருந்தது.
ஒரு அரசு வெளியிடும் படிவத்தில், எவ்வாறு ஒரு சாதியை வெளிப்படையாக குறிப்பிடுவது என்பது குறித்து, சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.