இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதச்சார்பின்மை தான் இந்தியக் கோட்பாடு என்கிறது நம் அரசியலைமைப்புச் சட்டம். பதவி உயர்வில், பட்டியலினத்தோர், மலைவாழ் மக்களுக்கு இருக்கும் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு கூடாது என சட்ட விரோத தீர்ப்பையே கூட நீதிபதிகள் அளித்திருக்கிறார்கள். எனவே, சமூக நீதி என்பது தவிர்க்க முடியாததாகிறது.
சமூகநீதியை நிலை நாட்டுவதற்காகத் தான் தந்தை பெரியார் அன்றே விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தினார். வேலைவாய்ப்பில் சாதிக் கணக்கிற்கேற்ப இட ஒதுக்கீடு என்பதாகும். சமூக நீதியை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த தமிழ்நாடும், மோடியின் தடாலடிகளைத் தட்டிக் கேட்பதில்லை. காரணம் மோடியின் ஆட்களே ஆட்சியாளராக இருப்பதுதான்.