தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களுக்கு மாதம் பண உதவி: அரசு முக்கிய அறிவிப்பு - பெண் குழந்தைகளுக்கு உதவி

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்னும் திட்டத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெண்களுக்கு மாதம் பண உதவி:
பெண்களுக்கு மாதம் பண உதவி:

By

Published : Dec 3, 2021, 1:33 PM IST

சென்னை:இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

இந்த நிதி உதவித்தொகை, பணக்காரர்களுக்கும், மாத ஊதியம் பெறுபவர்களுக்கும் வழங்கக் கூடாது என்பதற்காக, தகுதி வாய்ந்த குடும்பங்களைக் கண்டறிய அளவுகோல் மற்றும் வழிமுறைகளை அரசு வகுத்துவருகிறது" எனத் தெரிவித்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகிவிட்டது. இதுவரை இந்தத் திட்ட அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனிடையே தற்போதுள்ள நிதி பற்றாக்குறையில், 1000 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் வரும் பொங்கல் நாளன்று இதுகுறித்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details