சென்னை : சென்னையைச் சேர்ந்த பாவனா என்னும் மாற்றுத்திறனாளி, நடைபாதைகளில் வாகனங்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கம்பங்கள் விதிமுறைப்படி அமைக்கப்படவில்லை எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்து மனுவில், “மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு வெளியிட்ட விதிமுறைகளின்படி, நடைபாதைகளில் சக்கர நாற்காலிகள் செல்லும் வகையில் உரிய இடைவெளி விட்டு தடுப்புக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், சென்னையில் பல இடங்களில் இந்த தடுப்புக் கம்பங்கள் மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாக செல்ல முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பங்களை அகற்றி, விதிகளின்படி அமைக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர், வழக்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர், ரயில்வே துறைகளை சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:மதுரையில் தெரு நாய்களை அப்புறப்படுத்தும் வழக்கு - விலங்குகள் நல வாரியத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு