தமிழ்நாடு

tamil nadu

ஓய்வு பெற்ற போலீஸ் மீது வழக்குப்பதிவு... தன்னை ஏமாற்றியதாக மனைவி புகார்

By

Published : Jul 18, 2021, 12:23 AM IST

தனது மனைவியை ஏமாற்றிய குற்றத்திற்காக ஓய்வு பெற்ற காவலர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை: கொளத்தூரை சேர்ந்தவர் இளவரசி(65). இவர் கடந்த 1975ஆம் ஆண்டு சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகோபாலன் என்பவரை காதலித்து பெங்களூரில் திருமணம் செய்து கொண்டார். விஜயகோபாலன் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்.

திருமணமாகி 7 மாதங்கள் சென்னையில் மையிலாப்பூர், வால்டாக்ஸ் ரோடு, கெல்லீஸ், லாக்மா நகர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்துவிட்டு பிறகு வேலைக்கு செல்வதாக கூறி விஜயகோபாலன் ஹைதராபாத் சென்றுவிட்டார்.

அதன்பிறகு விஜயகோபாலன் இளவரசியை தொடர்பு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இளவரசிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவரை காணவில்லை என பாதிக்கப்பட்ட இளவரசி செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன்பின்னர் தலைமறைவாக இருந்த விஜயகோபாலன் 1985ஆம் ஆண்டு உஷாராணி என்பவரை திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து முறையிட்ட விஜயகோபாலன் இளவரசிக்கு பிறந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை எனவும் டிஎன்ஏ மூலம் நிரூபித்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் இளவரசியிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இளவரசி 2010ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். மேலும் டிஎன்ஏ டெஸ்ட் மூலம் உயிரியல் ஆய்வில் விஜயகோபாலன் தான் இளவரசியின் குழந்தையின் தந்தை என 2020ஆம் ஆண்டு கோர்ட்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இளவரசியையும், அவருடைய மகளின் பிறப்பையும் தவறாக பேசிய விஜயகோபாலன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளவரசி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரை பெற்று கொண்ட காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பொன் வேண்டாம் பொண்ணே போதும் - 'மாஸான' மாப்பிள்ளை

ABOUT THE AUTHOR

...view details