தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.......சதுர்வேதி சாமியார் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு - chennai thagaraya nagar

சென்னை தொழிலதிபர் மனைவி, மகளை பாலியல் வன்கொடுமை செய்து கடத்திய வழக்கில் போலி சாமியார் சதுர்வேதியை வருகிற 31ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.

sathurvethi samiyar
சாமியார் சதுர்வேதி

By

Published : Jul 13, 2023, 2:06 PM IST

சென்னை: சென்னை தியாகராய நகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் என்ற பெயரில் அறக்கட்டளையை நிறுவி, ஒவ்வொரு மாதம் அமாவாசையன்று சொற்பொழியாற்றி வந்தவர், சரவணன் என்கிற பிரச்சன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி. தன்னை கிருஷ்ணனின் அவதாரம் எனக்கூறிக்கொண்டும்; அரிசியை வெண்பொங்கலாக மாற்றி காட்டுவது போன்ற பல்வேறு சித்து விளையாட்டுகளையும் இவர் செய்து வந்தார்.

இவரை கடந்த 2004ஆம் ஆண்டு சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் தொடர்பாக சந்திக்க வந்துள்ளார். பின்னர், பிரச்னையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி பூஜை செய்ய வேண்டும் என தொழிலதிபரை ஏமாற்றி அவரிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பறித்து, அவரின் வீட்டையும் சதுர்வேதி சாமியார் ஆக்கிரமித்ததோடு அவரது மகள் மற்றும் மனைவியை சதுர்வேதி சாமியார் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்து ஆந்திராவிற்கு கடத்திக் கொண்டு சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் சதுர்வேதி மீது கடந்த 2004ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடத்தல், பாலியல் வன்கொடுமை, சிறை வைத்தல் உள்ளிட்ட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதுர்வேதி சாமியாரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க:விழா மேடையில் காலணியை கழட்டி வைத்து வந்த விவசாயியை கண்டித்த எம்எல்ஏ... பொதுமக்கள் பாராட்டு!!

இந்த வழக்கில் சதுர்வேதி சாமியார் மீது சென்னை மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. பின்னர் தலைமறைவான சதுர்வேதி சாமியாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்தனர். இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்த சதுர்வேதி சாமியார் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

இதனையடுத்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் சதுர்வேதி சாமியாரை கடந்த ஜூன் 27ஆம் தேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இந்த நிலையில் வரும் 31ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சாமியார் சதுர்வேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதே போல சாமியார் சதுர்வேதி மீது சென்னை மத்திய குற்றப்பிரில் தொழிலதிபர் திருஞானம் என்பவரிடம் ரூ.30 லட்சம் பறித்து அவரை தாக்கிய வழக்கு உட்பட 5 மோசடி வழக்குகள் மற்றும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு நிலுவையில் உள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பாெறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணையை இன்று வெளியிடுகிறார் அமைச்சர் பொன்முடி!

ABOUT THE AUTHOR

...view details