சென்னை:ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, இன்று முதல் (ஜன.09) வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக டிசம்பர் 19ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின.
இந்த வேலை நிறுத்தத்தில் தொமுச மற்றும் ஐ.என்.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், வேலைநிறுத்த போராட்டத்திற்குத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், மூத்த வழக்கறிஞர் P.R.ராமன் ஆஜராகி முறையீடு செய்தார்.