தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

20 நாள்களில் 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு! - Case filed against violating

சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 20 நாள்களில் 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

police
police

By

Published : Apr 14, 2020, 4:56 PM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 20 நாள்களில் 1,75,238 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும், தடையை மீறியதாக 1,87,623 பேரை கைதுசெய்து ஜாமினில் விடுவித்துள்ளதாகவும், 1,48,342 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும். 76 லட்சத்து 96 ஆயிரத்து 544 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details