தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு விதிகள் மீறல்: திமுக எம்எல்ஏ கருணாநிதி மீது வழக்குப்பதிவு!

சென்னை: பம்மல் அருகே தடுப்புகளை அகற்றி, பொதுமக்களைத் திரட்டி நிவாரணப் பொருள்கள் வழங்கிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நிவாரணம் வழங்கும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்
நிவாரணம் வழங்கும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்

By

Published : Apr 17, 2020, 10:14 AM IST

சென்னை பம்மல் நகராட்சியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சீல்வைக்கப்பட்ட பகுதிகளில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

இதில், பல்லாவரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினார். அப்போது தடைசெய்யப்பட்ட பகுதிகளான சாமி தெரு, பாபூ தெருக்களில் உள்ள தடுப்புகளை அகற்றி, பொதுமக்களைத் திரட்டியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து நகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் விதிமுறைகளை மீறிய இச்செயல் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

நிவாரணம் வழங்கும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து தற்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி உள்ளிட்ட ஏழு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் கரோனா நிவாரண உதவிப் பொருள்கள் வழங்கும் பணி

ABOUT THE AUTHOR

...view details