சென்னை: பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் மனுதர்மம் இருப்பதாகக் கூறி அதனை தடை செய்ய வலியுறுத்தியும், மனுதர்ம நூலை தீயிட்டு எரித்தும் வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனுதர்மத்திற்கு எதிரான போராட்டம்: திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்கு - மனுதர்மத்தை தடை செய்யக் கோரி ஆர்பாட்டம்
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 250 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
case against thirumavalavan and 250 people
போராட்டத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன் உள்பட 250 பேர் மீது தடையை மீறி ஆர்ப்பாட்டம், சட்ட விரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மதிக்காமல் இருத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.