தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜோதிடத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடித்துவைப்பு - etv bharat

ஜோதிடம் தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஜோதிடத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடித்துவைப்பு
ஜோதிடத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடித்துவைப்பு

By

Published : Aug 28, 2021, 5:16 PM IST

சென்னை: மதுரையைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "ஜோதிடம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதால் பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கும், இஸ்ரோவுக்கும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் சஞ்ஜிப் பானர்ஜி, ஆதிகேசவலு அமர்வு, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மனுதாரர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இதில் தனி நபரின் நம்பிக்கை சம்பந்தப்பட்டுள்ளதால், மனுதாரர் கோருவது போல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

இந்தப் பிரபஞ்சம் உருவானது குறித்த அறிவியல் என்பது ஆரம்ப நிலையில் உள்ளது. அண்டம் குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் விடை காண முடியவில்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:தொழிலதிபர் கடத்தலுக்கு உதவிய திருமங்கலம் உதவி ஆணையர், ஆய்வாளர் ஹைதராபாத்தில் பதுங்கல்

ABOUT THE AUTHOR

...view details