தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்... 5 வாகனங்களுக்கு தீ பரவியதால் பரபரப்பு! - போக்குவரத்து புலனாய்வு பிரிவு

அடையாறில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்த நிலையில், அருகில் இருந்த 5 வாகனங்களுக்கு தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 3, 2023, 10:51 PM IST

சென்னை: அடையாறு திருவிக பாலத்தின் கீழ் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றில் புகை கிளம்பி மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனை கண்டு பதறிப் போன கார் ஓட்டுநர் அந்த காரிலிருந்து உடனடியாக வெளியேறினார்.

பின்னர் உடனே காரிலிருந்து தீயானது பரவி பாலத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து இருசக்கர வாகனங்களில் பற்றியது. இந்த தீ விபத்தில் ஒரு கார் மற்றும் ஐந்து இரு சக்கர வாகனங்கள் முழுவதுமாக எரிந்து நாசமானது.

இதையும் படிங்க: Odisha Train Accident: குலுங்கிய ரயில், பிணக்குவியல்: விபத்தில் சிக்கி மீண்டவர்களின் பேட்டி

உடனே அருகிலிருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மயிலாப்பூர், சைதாப்பேட்டை மற்றும் அடையார் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். திப்பிடித்த போது காரில் இருந்த ஓட்டுனர் இறங்கி ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

பின்னர் காரில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி எனவும், வாகன உரிமையாளர் யார் என்பது தொடர்பாகவும் சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Odisha Train Accident: சென்னை சென்ட்ரலில் 6 மருத்துவ குழுக்கள் தயார் - ககன் தீப் சிங்!

ABOUT THE AUTHOR

...view details