சென்னை:தாம்பரம் அடுத்த வண்டலூர்-மீஞ்சூர் பைபாஸ் சாலையில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (26) என்பவர், மீஞ்சூரில் இருந்து வண்டலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது, வண்டலூர் அருகே சொகுசு காரில் மீஞ்சூரில் இருந்து வண்டலூர் நோக்கி செல்லக் கூடிய பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலை வழியாக எதிர்ப்புறமாக வரும்போது, போக்குவரத்து போலீசார் கார் ஓட்டி வந்த நபரை தடுத்து நிறுத்தி உள்ளனர்.
அப்போது போலீசாரை இடிப்பதுபோல் கார் வந்ததால், போலீசார் அதனை விட்டு விலகியுள்ளார். இதனையடுத்து, காரை ஓட்டி வந்த நபர் அதிவேகத்தில் சென்றதால், பைபாஸ் சாலையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி, வாகனத்தை ஓட்டி வந்த வசந்தகுமார் தூக்கி வீசப்பட்டார்.