தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது - chennai district news

சென்னை: அம்பத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல்
இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல்

By

Published : Oct 29, 2020, 2:23 PM IST

சென்னை அம்பத்தூர் அடுத்த சண்முகபுரம் அருகே அக்டோபர் 20ஆம் தேதி காரில் கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர். அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான வில்லிவாக்கம் அகத்தியர் நகரைச் சேர்ந்த ராம்குமார் தப்பி ஓடிவிட்டார். அம்பத்துார் காவல் துறையினர் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று (அக்.29) இரவு ராம்குமார் கஞ்சா கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அவரை பிடிக்க அம்பத்தூர் தாங்கல் பூங்கா அருகே காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சிக்கினர். அவர்களை சோதனையிட்டபோது பையில், 11 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் ராம்குமாரின் கூட்டாளிகளான வில்லிவாக்கம் அகத்தியர் நகரைச் சேர்ந்த ஜெகன் (27), அம்பத்துார் விஜயலட்சுமி புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் 330 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details