சென்னை: அதிக உணர்திறன் கொண்ட கடக ராசிக்காரர்களே, உறவினர்களுடன் இருப்பதே உங்களின் விருப்பமாக இருக்கும். இந்த ஆண்டு உணர்ச்சிகரமான அணுகுமுறையைக் காட்டிலும் நடைமுறை அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் அதிக பயனடையலாம். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் வருவாயை உயர்த்த முயற்சிப்பீர்கள்.
குடும்பம் சார்ந்த செயல்களில் கவனத்தைச் செலுத்துவதோடு அவர்களின் உதவியுடன் சில முக்கிய முடிவுகளையும் எடுப்பீர்கள். இந்த ஆண்டு குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தையோ அல்லது நீண்ட காலமாக குடும்பத்தில் இருக்கும் நிறுவனத்தையோ நிர்வகித்தால், அந்த நிறுவனத்தில் அதிக வருவாயைக் காணலாம்.
நீங்கள் சிறந்த நிதி நிலையை அடைவீர்கள். சர்வதேச பயணத்திற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் ராணுவம், விமானப்படை அல்லது காவல்துறை பணிகளுக்கு விண்ணப்பித்து, அவற்றில் சேர விரும்பினால் இந்த ஆண்டு வெற்றிபெற வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.