தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வியாண்டில் இடையில் ஓய்வு பெற்றாலும் பணி வழங்கலாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! - academic year 2022 2023

கல்வியாண்டில் இடையில் ஓய்வு பெற்றாலும் ஆண்டு முழுவதும் பணி வழங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.

கல்வியாண்டில் இடையில் ஒய்வு பெற்றாலும் பணி வழங்கலாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
கல்வியாண்டில் இடையில் ஒய்வு பெற்றாலும் பணி வழங்கலாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

By

Published : Jun 29, 2022, 9:45 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் மாதங்களில் 2,000 ஆசிரியர்கள் வரை ஓய்வு பெறவுள்ளனர். இதனால் அந்தப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் கற்பித்தல் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்படும். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறைச் செயலளார் காகர்லா உஷா, அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கல்வியாண்டில் இடையில் ஒய்வு பெற்றாலும் பணி வழங்கலாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

இவ்வாறு வெளியான அரசாணையில், “ஆசிரியர்களின் பண்பு, நடத்தை, செயல்பாடுகள் ஆகியவை திருப்தியாக இருந்தால் மறு பணி நியமன உத்தரவு வழங்கலாம். தொடர்ந்து பணிபுரியும் வகையில் உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் ஓய்வு பெறும் நாளுக்கு ஓராண்டிற்கு முன்னர், ஓய்வூதிய கருத்துகள் மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட வேண்டும்.

கல்வியாண்டில் இடையில் ஓய்வு பெற்றாலும் பணி வழங்கலாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

2022 - 2023ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், கல்வியாண்டின் தொடக்கம் முதல் முடியும் வரையில் தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு மறு நியமனம் வழங்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த வேதியியல் ஆசிரியர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details