தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிப்ரவரி 4இல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் - தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் பிப்ரவரி 4ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி

By

Published : Feb 2, 2020, 5:13 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப்ரவரி 4ஆம் தேதி காலை 10:30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில் வளர்ச்சி குறித்தும் புதிய தொழில் தொடங்குவது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படவுள்ளது.

உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு தமிழ்நாட்டில் எந்தளவிற்கு முன்னெச்சரிக்கை எடுத்திருக்கிறார்கள் என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:ஓய்வூதியத்தை இழுத்தடித்த அரசு; முதலமைச்சர் காலில் விழுந்து கதறிய பெண்

ABOUT THE AUTHOR

...view details