தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலதிபரை கடத்த முயன்ற வழக்கு - ஒருவர் கைது! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கட்டுமான தொழில் செய்து வரும் தொழிலதிபரை கடத்த முயன்ற வழக்கில் மணல் சப்ளை செய்யும் ஒப்பந்ததாரரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொழிலதிபர் கடத்த முயன்ற வழக்கு
தொழிலதிபர் கடத்த முயன்ற வழக்கு

By

Published : Oct 2, 2021, 1:47 PM IST

சென்னை : அண்ணா நகர் 'W' பிளாக் பகுதியில் வசித்து வருபவர் பிரவீன் (54). இவர் கட்டட கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் நிறுவனம் வைத்து நடத்திவருகிறார். கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி பிரவீன் அண்ணா நகர் 'X' பிளாக் வழியாக தனது காரில் வந்துள்ளார்.

அப்போது, இரு வேறு கார்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பிரவீன் காரின் முன்னும் பின்னும் மோதி, கத்தியைக் காட்டி மிரட்டி அவரை பின் தொடர்ந்து கடத்த முயன்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பிரவீன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஐந்து பேர் கைது

இதற்கிடையில் சென்னை கொளத்தூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை கட்டிவைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் அம்பத்தூரைச் சேர்ந்த தமிழ் (எ) தமிழ் செல்வம் (23), பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜய் (25), கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மதன் (25), பாக்சர் விஜய் (எ) விஜய குமார் (25), மைக்கேல் (எ) ஸ்டீபன் ராஜ் (32) ஆகிய ஐந்து பேரை ராஜமங்கலம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொழிலதிபர் கடத்த முயன்ற வழக்கு

இதில்,அண்ணா நகர் தொழிலதிபர் பிரவீனை கடத்த முயன்றதும் தாங்கள்தான் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, ஐந்து குற்றவாளிகளையும் அண்ணா நகர் காவல்துறையினர் தொழிலதிபர் பிரவீன் கடத்தல் வழக்கில் கைது செய்து அவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

ஒப்பந்ததாரர் ஒருவர் கைது

இந்த விசாரணையில் அம்பத்தூரைச் சேர்ந்த முகமது பாட்ஷா (27) என்பவர்தான் தொழிலதிபர் பிரவீனை கடத்தச் சொல்லி ஸ்கெட்சு போட்டு கொடுத்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து அண்ணா நகர் காவல்துறையினர் முகமது பாட்ஷா-வை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கட்டிட கட்டுமான தொழில் செய்து வரும் பிரவீனுக்கு மணல் சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்தான் இந்த முகமது பாட்ஷா என்பதும், பிரவீனிடம் பணம் நிறைய இருப்பதை அறிந்த முகமது பாட்ஷா, பிரவீனை கடத்தி பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து முகமது பாட்ஷா-வை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க : மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்

ABOUT THE AUTHOR

...view details