தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக மே மாதம் முழு ஊரடங்கும், தற்போது சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசியத் தேவையான பேருந்து வசதிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இன்று (ஜூன்.15) 11 ஆயிரத்து 805 பேருக்கு கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
கரோனா பரவல் குறைவாக உள்ள மாவட்டங்களில் நேற்று (ஜூன்.14) முதல் டாஸ்மாக் உள்ளிட்ட சில கடைகள் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கரோனோ தொற்று பரவல் குறைவாக உள்ள சென்னை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய 27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை இந்த வார இறுதியில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.