தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநகரப் பேருந்து மோதி இருவர் பலி; நொடிப்பொழுதில் நேர்ந்த துயரம்! - cctv

சென்னை: நந்தனம் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.

cctv

By

Published : Jul 16, 2019, 12:16 PM IST

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிவன், பவானி, லட்சுமி ஆகியோர் சென்னையில் தங்கி பணியாற்றி வந்தனர். இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் சென்றுள்ளனர்.

அப்போது நந்தனம் அருகே எதிர்பாராதவிதமாக அருகில் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் உறசியதில் அருகே வந்துகொண்டிருந்த மாநகரப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கினர். இதில் லட்சுமியும், பவானியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிவன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதறவைக்கும் சிசிடிவி காட்சி

இந்த விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள நந்தனம் போலீசார், சிசிடிவி காட்சியின் உதவியோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details