சென்னை: வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் வழக்கறிஞர்கள் கூட்டாக புகார் ஒன்றை அளித்தனர். பின்னர் வழக்கறிஞர் சம்சுல் சமீரா செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இந்திய வம்சாவளியை சேர்ந்த செழியன், தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.
அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்திய தேசியக் கொடியை எரித்தும், காந்தி, முன்னாள் அரசியல் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் உருவபடங்களை எரித்தும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோவை நீக்க வேண்டும்
குறிப்பாக நாளை(ஆக.15) நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த வீடியோவை வைரலாக்கி கேவலபடுத்துவேன் என்றும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டின் இறையாண்மையை கெடுக்கும் விதத்தில் அந்த வீடியோ இருக்கிறது. அரசு, அரசு அலுவலர்கள் மீதுள்ள கோவத்தை நாட்டின் மேல் காட்டக்கூடாது. இந்த வீடியோவை ஷேர் செய்யாமல் சம்மந்தப்பட்ட சமூகவலைதள நிறுவனத்திடம் புகார் அளிக்கவேண்டும்.
உடனடியாக அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி, வீடியோவை வெளியிட்ட செழியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளோம்” என்றார்
இதையும் படிங்க: வங்கி மேலாளரை கம்பியால் தாக்கிய இருவர் - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை