தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் மோடியின் சகோதரருக்கு திடீர் உடல்நலக்குறைவு! சென்னை மருத்துவமனையில் அனுமதி - பிரகலாத் தாமோதரதாஸ் மோடி

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 28, 2023, 11:07 AM IST

சென்னை:சென்னை அப்போலோ மருத்துவனையில் பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடி இன்று (பிப்.28) காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரகலாத் தாமோதரதாஸ் மோடி சிறுநீரக பிரச்சனை காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் நாடு முழுவதும் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இவர் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் திடீர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியுடன் பிறந்தவர்கள் 5 பேர்கள் ஆவர். அவர்களில் இவர் பிரதமர் மோடிக்கு இளைய சகோதரர் ஆவார். இவர் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் டயர் ஷோரூம் உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மதுக்கொள்கை முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல்

ABOUT THE AUTHOR

...view details