தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை போக்குமா தெற்கு ரயில்வே!

சென்னை மக்களின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க உதவுமாறு, சென்னை மாநகர குடிநீர் வாரியம் தெற்கு ரயில்வேவிற்கு கடிதம் எழுதியுள்ளது.

By

Published : Jun 27, 2019, 11:29 AM IST

தெற்கு ரயில்வே

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்துப் போனதால் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. சென்னைக்கு தண்ணீர் வழங்கும் பூண்டி, சோழவரம் செம்பரம்பாக்கம் புழல் ஆகிய நான்கு நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால், சென்னை மக்களுக்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் பிரச்னை காரணமாக பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளனது. தமிழ்நாட்டில் சென்னை மக்களின் தண்ணீர் பிரச்னை ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ பார்வைக்கும் சென்றதுதான் ஹைலைட்டாக உள்ளது. பிபிசி-யில் வெளியான செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததால் உலக மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

நாளுக்கு நாள் சென்னை மக்களின் நிலைமை மோசமடைந்து வருவதை உணர்ந்த முதலமைச்சர் பழனிசாமி வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக குடிநீர் கொண்டு வரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு ரூ.65 கோடி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மாநகர குடிநீர் வாரியம், தெற்கு ரயில்வேக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இதில், 'தமிழ்நாடு அரசின் ஆலோசனைப்படி தினந்தோறும் பத்து மில்லியன் லிட்டர் குடிநீர் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். ஆறு மாதத்திற்கு தினந்தோறும் குடி நீர் எடுத்துவர முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிக்கு தெற்கு ரயில்வே ஒத்துழைக்க வேண்டும்' என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ரயில்களில் குடிநீரை கொண்டு வருவதற்கு வசதியாக வேகன்களை ஏற்பாடு செய்து தந்து உதவுமாறு குடிநீர் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details