சென்னை ஆதம்பாக்கத்தில் வாகனச் சோதனையின்போது குற்றப்பிரிவு ஆய்வாளர் பூமாதேவி சென்னையைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார்.
இதையடுத்து உரிய ஆவணங்களைக் எடுத்துச்சென்று கண்ணன் வாகனத்தைக் கேட்டபோது, மூன்று ஆயிரம் பணம் கொடுத்தால் அதை திருப்பித் தருவதாக கூறியுள்ளார்.
கையூட்டு கொடுக்க விரும்பாத கண்ணன் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதேபோல் பூமாதேவி மீது பல புகார்கள் வந்த வண்ணமாக இருந்ததன் காரணத்தால் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை காண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் 15 அலவலர்கள் நேரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ரூபாய் மூன்றாயிரம் ரசாயனம் தடவப்பட்ட நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள், கண்ணனிடம் கொடுத்து ஆய்வாளரிடம் கொடுக்கக் கூறியுள்ளனர்.
அவர் பணத்தை பூமாதேவியிடம் கொடுத்தபோது சுற்றி வளைத்த காவலர்கள் பூமா தேவியை சுற்றிவளைத்து கைது செய்தனர். இதையடுத்து, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அவரிடம் வைத்து லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.